எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்து மீறி துப்பாக்கிச்சூடு ; பள்ளிக் குழந்தைகளை இந்திய இராணுவம் மீட்டதால் பரபரப்பு


எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்து மீறி துப்பாக்கிச்சூடு ;  பள்ளிக் குழந்தைகளை இந்திய இராணுவம் மீட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Sept 2019 4:43 PM IST (Updated: 15 Sept 2019 5:02 PM IST)
t-max-icont-min-icon

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்து மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பள்ளிக் குழந்தைகளை இந்திய இராணுவம் மீட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீநகர்,

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. இதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான்  எல்லைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெரும் பதற்ற நிலை ஏற்பட்டு வந்துள்ளது.

தற்போது, ஜம்மு-காஷ்மீர் யுனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி  துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதனை அடுத்து இந்திய இராணுவ வீரர்கள் எல்லையின் அருகே உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story