கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு
ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.
ஐதராபாத்,
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 61 பேர் பயணம் செய்தனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் பயணித்தவர்கள் பாதுகாப்பு உடைகள் இல்லாதால் பலர் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 11 பேரின் உடல்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாயமானவர்களை தேடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தினர் இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. 15 பேர் நீந்தி கரை சேர்ந்ததாக தகவல் தெரிவிக்கின்றது.
படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ரூ10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story