மகாராஷ்டிரா கட்சிரோலியில் நடந்த என்கவுண்டரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை


மகாராஷ்டிரா கட்சிரோலியில் நடந்த என்கவுண்டரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 15 Sept 2019 9:55 PM IST (Updated: 15 Sept 2019 9:55 PM IST)
t-max-icont-min-icon

மகாராஷ்டிரா கட்சிரோலி மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

கட்சிரோலி,

மகாராஷ்டிராவில் உள்ள நார்காசா வனப்பகுதி கட்சிரோலி மாவட்டத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  நார்காசா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள்  பதுங்கியிருப்பதாக, மாவோயிஸ்டு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கிடைத்த தகவலில் பேரில் போலீசார் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

இந்த  துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் விவரம் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்திலிருந்து மாவோயிஸ்டுகளின் துப்பாக்கிகள் மற்றும் உடைமைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். நார்காசா வனப்பகுதியில் மாவோயிஸ்டு தடுப்புப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story