வீடியோ வெளியானதில் சதித்திட்டம்: கற்பழிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார்
வீடியோ வெளியானதில் சதித்திட்டம் உள்ளதாக, கற்பழிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் கூறியுள்ளார்.
ஷாஜகான்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்த் தனது ஆசிரம அறக்கட்டளை நடத்தும் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவியை கற்பழித்ததாக வழக்கில் சிக்கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் அந்த மாணவி சின்மயானந்துக்கு எதிரான வீடியோ ஆதாரங்களை வழங்கினார்.
அந்த மாணவியின் தந்தை கூறும்போது, “அந்த வீடியோ காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களுக்கு எப்படி சென்றது? அதனைதான் எனது மகள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுத்துள்ளார். இதில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிப்பதுடன், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்பேன்” என்றார்.

Related Tags :
Next Story