உங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரம் பிறந்தநாளுக்கு கார்த்தி எழுதிய 2 பக்க கடிதம்
டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் 2 பக்கம் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு இன்று 74வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு அவரது மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதி உள்ளார். 2 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நடந்த பல்வேறு நிகழ்வுகளை விளக்கியதுடன், பாஜக அரிசின் 100 நாள் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பளவை சுட்டிக் காட்டியும் விமர்சித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் எழுதிய கடிதத்தில்,
அப்பா, நீங்கள் இன்று 74 வயதை எட்டியுள்ளீர்கள் உங்களை எந்த 56-லும் தடுத்து நிறுத்த முடியாது. உங்களுக்கு எப்போதுமே உங்களுடைய பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதில் நாட்டமிருந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் நம் நாட்டில் சிறுசிறு விஷயங்கள்கூட பெரிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பிறந்தநாளில் நீங்கள் எங்களுடன் இல்லை என்பது எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. எங்கள் அனைவருடனும் இணைந்து கேக் வெட்ட, நீங்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story