தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப முடியுமா? - அறிக்கை தாக்கல் செய்ய பதிவாளருக்கு உத்தரவு + "||" + SC seeks report from its Registry on how much time it would take to facilitate live-streaming

அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப முடியுமா? - அறிக்கை தாக்கல் செய்ய பதிவாளருக்கு உத்தரவு

அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப முடியுமா? - அறிக்கை தாக்கல் செய்ய பதிவாளருக்கு உத்தரவு
அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப முடியுமா? என்பதை தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.


இந்த வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவிந்தாச்சார்யா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுக்கு கடந்த 6-ந்தேதி அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் அயோத்தி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கோவிந்தாச்சார்யா சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜராகி வாதிட்டார்.

அவர் கூறுகையில், ‘அயோத்தி வழக்கின் மனுதாரர்கள் சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்த விசாரணையில் பங்கேற்க பல மனுதாரர்களால் தினந்தோறும் வர முடியாது. எனவே இந்த விசாரணையை நேரலையில் ஒளிபரப்பினால் அவர்களும் பலன்பெற முடியும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப முடியுமா? என்பதை தெரிவிக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் நேரலையில் ஒளிபரப்ப முடியுமென்றால், எவ்வளவு நாட்களில் ஒளிபரப்பை தொடங்க முடியும்? என்று அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உடனே வக்கீல் விகாஸ் சிங், இதற்காக பதிவாளருக்கு ஒரு காலக்கெடு வழங்குமாறு நீதிபதிகளை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு மறுத்த நீதிபதிகள், அது பதிவாளரைச் சார்ந்தது என பதிலளித்தனர்.

முன்னதாக தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சொத்துக்கள் முடக்கம்: விஜய் மல்லையா மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
தனது சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
2. உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக மனு ; உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
3. நிர்பயா வழக்கு ; மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை பிப்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
நிர்பயா வழக்கில் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
4. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை: பிரதமர் மோடி அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. அயோத்தியில் தொடர் குண்டுவெடிப்பு: பதற்றம் நீடிப்பு
அயோத்தியில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.