அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என நம்புகிறேன்- உத்தவ் தாக்கரே


அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என நம்புகிறேன்- உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 16 Sept 2019 9:06 PM IST (Updated: 16 Sept 2019 9:06 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என நம்புகிறேன் என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பையில் நடைபெற்ற நிகழ்சியொன்றில் பேசிய சிவசேனா  கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே,

ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளும் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. 
அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என நம்புகிறேன்.

கோவில் கட்டும் விவகாரத்தில், இனியும் காத்திருப்பது சரியல்ல, ராமர் கோவில் கட்டுவதற்கான முதல் செங்கல்லை எடுத்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொள்ள சிவசேனா தொண்டர்கள் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

Next Story