திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு


திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 18 Sept 2019 11:55 AM IST (Updated: 18 Sept 2019 11:55 AM IST)
t-max-icont-min-icon

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.

புதுடெல்லி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்  முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்  கைது செய்யப்பட்டு  கடந்த செப்டம்பர் 5 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் இன்று  காலை திகார் சிறையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்தனர். அவர்களுடன் சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் சென்று  இருந்தார்.

சிதம்பரத்திடம்  காஷ்மீர் உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைமை, வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து தலைவர்கள் அரை மணி நேர சந்திப்பின் போது விவாதித்ததாக  கூறப்படுகிறது.

Next Story