தேசிய செய்திகள்

இந்திய எல்லை அருகே புதைக்கப்பட்ட 13.72 கிலோ ஹெராயினை பஞ்சாப் போலீசார் மீட்டனர் + "||" + Punjab police have recovered 13.72 kg of heroin buried near the Indian border

இந்திய எல்லை அருகே புதைக்கப்பட்ட 13.72 கிலோ ஹெராயினை பஞ்சாப் போலீசார் மீட்டனர்

இந்திய எல்லை அருகே புதைக்கப்பட்ட 13.72 கிலோ ஹெராயினை பஞ்சாப் போலீசார் மீட்டனர்
இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே புதைக்கப்பட்ட 13.72 கிலோ ஹெராயினை பஞ்சாப் போலீசார் மீட்டுள்ளனர்.
அமிர்தசரஸ்,

அமிர்தசரஸ் மாவட்டம் அஜ்னாலா போங்கா கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி சாம்ஷர் சிங் என்ற ஷெரா போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 7.5 கிலோ ஹெராயின், ரூ.28 லட்சம் ஹெராயின் விற்ற பணம், கார் மற்றும் நான்கு செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


அவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றப் பிரிவு 21-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சாம்ஷர் சிங்குக்கு பாகிஸ்தானிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேற்கொண்ட விசாரணையில் அமிர்தசரஸ் மாவட்டம் டாவோக் கிராமத்தில் உள்ள வயல்வெளியில்  போதைப்பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

தகவலின் பேரில் காவல் துறை அதிகாரிகள் எல்லை பதுகாப்பு படையினரின் உதவியுடன் (பி.எஸ்.எப்) அந்த வயல்வெளிக்கு சென்று 13.72 கிலோ ஹெராயினை தோண்டி எடுத்து கைப்பற்றினர். போதைப்பொருட்கள் பாகிஸ்தானை தாயகமாக கொண்டு எல்லையின் வழியாக இந்தியாவிற்கு கடத்தப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் கூறியுள்ளனர்.