கிழிந்த பாஸ்போர்ட்டுடன் விமானத்தில் வந்தவர் கைது


கிழிந்த பாஸ்போர்ட்டுடன் விமானத்தில் வந்தவர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2019 2:30 AM IST (Updated: 19 Sept 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

கிழிந்த பாஸ்போர்ட்டுடன் விமானத்தில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் சிக்கந்தர் இஸ்லாம். இவர் நேற்று தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா வந்தார்.

விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது பாஸ்போர்ட்டில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் அதிகாரிகள், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் பாஸ்போர்ட்டில் சில பக்கங்களை கிழித்ததை ஒப்புக்கொண்டார். தான் ஒரு துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து ஷேக் சிக்கந்தர் இஸ்லாமை அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story