முன்னாள் ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் ஆம் ஆத்மியில் இணைந்தார்
ஜார்கண்ட் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
புதுடெல்லி,
முன்னாள் ஜாம்ஷெட்பூர் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் அஜோய் குமார் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி அஜோய் குமார் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
தற்போது, அஜோய் குமார் புதுடெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக 14 வருடம் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story