இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது விமானப்படை தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். அவர் ஓய்வு பெற்றவுடன் ஆர்.கே.எஸ்.பதாரியா பொறுப்பை ஏற்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆர்.கே.எஸ்.பதாரியா தற்போது விமானப்படை துணை தளபதியாக பதவி வகித்துவருகிறார்.
ஆர்.கே.எஸ் பதாரியாவும் வரும் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். தற்போது விமானப்படை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், மேலும் 3 ஆண்டுகள் அவர் பதவி வகிப்பார் அல்லது 62 வயது வரும் வரை என எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார். இதன்படி பார்க்கையில், ஆர்.கே.எஸ்.பதாரியா அடுத்த இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார்.
Related Tags :
Next Story