தேசிய செய்திகள்

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது + "||" + Banning e-cigarettes Emergency law has been released

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது
இ-சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது.
புதுடெல்லி,

இ-சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க நேற்று முன்தினம் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையை அமல்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

அதில், இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி-இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், அனுப்புதல், விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல் ஆகியவை அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்பட்டுள்ளது.

முதல்முறை தவறு செய்பவர்களுக்கு ஓராண்டுவரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.1 லட்சம்வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அடுத்தடுத்து தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டுவரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 லட்சம்வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.