இந்தியா ஊட்டச்சத்து திட்டமான ‘போஷன் அபியான்’ இலக்குகளை அடைய வாய்ப்பில்லை-ஆய்வில் தகவல்


இந்தியா ஊட்டச்சத்து திட்டமான ‘போஷன் அபியான்’ இலக்குகளை அடைய வாய்ப்பில்லை-ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 20 Sept 2019 10:43 AM IST (Updated: 20 Sept 2019 10:43 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா ஊட்டச்சத்து திட்டமான ‘போஷன் அபியான்’ இலக்குகளை அடைய வாய்ப்பில்லை என்று ஆய்வு கூறுகிறது.

புதுடெல்லி

உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து திட்டமான போஷன் அபியான், 10 கோடி மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 2018 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம் குண்டாக இருக்கும் குழந்தைகள் எடையை குறைப்பது,  எடை குறைந்த குழந்தைகள் பிறப்பை குறைப்பது நோக்கமாகக் கொண்டுள்ளது.  குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்கள் மத்தியில் 2022 வரை தலா 3 சதவீதம்  இரத்த சோகை ஏற்படுகிறது. 2022 ஆம் ஆண்டில்  இதனை குறைக்க சிறப்பு இலக்கு 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி 2022 ஆம் ஆண்டில் பெண்கள், குறைந்த எடை குழந்தைகள் பிறப்பு மற்றும் இரத்த சோகை பாதிப்பைக் குறைப்பதற்காக லட்சியமான போஷன் அபியான் அல்லது தேசிய ஊட்டச்சத்து மிஷன் (என்என்எம்) இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை  அடைய இந்தியாவிற்கு வாய்ப்பு இல்லை என கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (பி.எச்.எஃப்.ஐ) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூட்டு முயற்சியாகும்.

ஆய்வில் 25 சதவீத என்ற அளவை 9.6 சதவீதமாக  குறைப்பதற்கான இலக்கை இந்தியா இழக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.  குளோபல் பார்டன் ஆஃப் டிசிஸ்  ஆய்வில்  1990-2017-ன் படி, 44.7 சதவீத  குழந்தைகளிடையே ரத்த சோகை அளவு 11.7 சதவீதம்  அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்க குழுவான என்ஐடிஐ ஆயோக் மூத்த அதிகாரி ஒருவர், இந்த ஆய்வுகள் கவலை அளிக்கவில்லை என்று கூறுகிறார்.

என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் கே. பால் கூறியதாவது:-

போஷன் அபியான் [சரிவின்] விகிதத்தை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. எடுத்துக்காட்டாக, இது எடை குறைந்தவர்களுக்கு ஆண்டுக்கு 2% குறைப்பு என்ற இலக்கை நிர்ணயிக்கிறது, ஆனால் இந்த குறிகாட்டியின் குறைப்பு சதவீதம் பொதுவாக 1 சதவீதம் ஆகும். எனவே, நாங்கள் இது குறித்து கவலைப்படவில்லை.

நடைமுறையில் உள்ள செயல்பாடுகள் மெதுவாக இருப்பதை நாங்கள் அறிவோம்; நாடு அவற்றை விரைவாகச் செய்ய விரும்புகிறது, அதை அடைய கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போஷன் அபியானின் கீழ், நாங்கள் ஒரு மாற்றத்தை செய்வோம், ”என கூறினார்.

Next Story