அயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை: உச்ச நீதிமன்றம்


அயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை: உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 20 Sep 2019 8:08 AM GMT (Updated: 20 Sep 2019 8:08 AM GMT)

அயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் இடத்தில் பாபர் மசூதி அமைந்திருந்தது. அந்த மசூதி கடந்த 1992-இல் இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்குகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்து கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை நிர்மோஹி அகாரா (துறவியர் அமைப்பு), சன்னி மத்திய வக்பு வாரியம், ராம் லல்லா ஆகிய மூன்று தரப்புகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு விசாரணையில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 28-வது நாளாக இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற அலுவல்கள் முடியும் 4 மணிக்கு பதிலாக கூடுதலாக ஒருமணி நேரம் அதாவது 5 மணி நேரம் இந்த வழக்கு விசாரணையை தொடர முடிவு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றம்,  வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினர்களிடமும் நீதிபதிகள் தெரிவித்தனர்.    அயோத்தி வழக்கில் நவம்பர் மாத நடுவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story