சென்செக்ஸ் ஒரேநாளில் 2200 புள்ளிகளுக்கு மேல் உயர்வு; கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்றம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,200 புள்ளிகளை தாண்டியது. இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது.
மும்பை
வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு நிறுவனங்களுக்கும் புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.
ரூ. 1.45 லட்சம் கோடி ஊக்கத் தொகுப்பின் ஒரு பகுதியாக கார்ப்பரேட் வரி விகிதங்களை அரசாங்கம் இன்று குறைத்துள்ளது.
இதனால் வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல் துறை பங்குகள் பன்மடங்கு உயர்ந்து உள்ளது. 10 ஆண்டுகள் இல்லாத அளவு இது ஏற்றம் கண்டுள்ளது. இந்திய பங்குச் சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம் ஒரே நாளில் 2,000 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. சென்செக்ஸ் 2 200 புள்ளிகள் உயர்ந்ததால் பங்கு வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story