நிதி மந்திரி வரி குறைப்பு அறிவிப்புகள் எதிரொலி - முதலீட்டாளர்கள் பங்கு மதிப்பு ரூ.7 லட்சம் கோடி உயர்வு


நிதி மந்திரி வரி குறைப்பு அறிவிப்புகள் எதிரொலி - முதலீட்டாளர்கள் பங்கு மதிப்பு ரூ.7 லட்சம் கோடி உயர்வு
x
தினத்தந்தி 21 Sept 2019 3:00 AM IST (Updated: 21 Sept 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

நிதி மந்திரி வரி குறைப்பு அறிவிப்புகள் எதிரொலியாக, முதலீட்டாளர்கள் பங்கு மதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பெரு நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1½ லட்சம் கோடி மதிப்பில் வரி குறைப்புகளை நேற்று அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 1921 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

இதனால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு அதிரடியாக ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிப்பதாக அமைந்தது.

Next Story