கர்நாடகா இடைத்தேர்தல்: 15 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்குகிறது மதசார்பற்ற ஜனதா தளம்
அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் கர்நாடகாவின் 15 தொகுதி இடைதேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்துகிறது.
மைசூரு
மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் கூட்டம் இன்று மைசூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கும் பணியை தேவேகவுடா ஏற்கனவே தொடங்கி விட்டார் என கூறினார்.
இடைத்தேர்தல் நடைபெறும் 15 இடங்களில் 8 முதல் 10 இடங்களில் குறைந்தபட்சம் கட்சி வெற்றியை குறிவைத்து உள்ளதாக அவர் கூறினார்.
15 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்க ஜே.டி (எஸ்) எடுத்த முடிவு, அதன் முந்தைய கூட்டணி காங்கிரசால் களமிறக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்த போது இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா, பிரதாப்கவுடா பட்டீல், ரோஷன் பெய்க், சிவராம் ஹெப்பார், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, ஆனந்த்சிங் ஆகிய 12 பேரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத், கோபாலய்யா, நாராயணகவுடா ஆகிய 3 பேரும் என மொத்தம் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.
இதைத் தொடர்ந்து குமாரசாமியின் அரசு கவிழ்ந்தது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story