கெட்டப்களுக்கு பெயர் போன... தெலுங்கு தேச முன்னாள் எம்.பி சென்னையில் மரணம்


கெட்டப்களுக்கு பெயர் போன... தெலுங்கு தேச முன்னாள் எம்.பி சென்னையில் மரணம்
x
தினத்தந்தி 21 Sep 2019 12:30 PM GMT (Updated: 21 Sep 2019 1:19 PM GMT)

எம்.ஜிஆர்., கருணாநிதி, ராமர், சிவன் என மாறுவேடங்களுக்கு பெயர் போன... தெலுங்கு தேச முன்னாள் எம்.பி சென்னையில் மரணம் அடைந்தார்.

அமராவதி

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான என்.சிவபிரசாத் சனிக்கிழமை சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்தார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது 68.

சிவபிரசாத்துக்கு  மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சிவபிரசாத் சில காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வியாழக்கிழமை, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



தெலுங்கு தேச கட்சி தலைவர்  சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் சிவபிரசாத்தை பார்த்து  உடல் நலம் விசாரித்து சென்றார்.

சிட்டபூர் (எஸ்சி) தொகுதியில் இருந்து சிவபிரசாத் மக்களவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் (ஒன்றுபட்ட) ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.


ஆந்திராவை (2013-14) பிரிப்பதை எதிர்த்தும் ,  ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி  நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களின் போதும்  ஒவ்வொரு நாளும் விதவிதமான தோற்றத்தில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பயிற்சி பெற்ற மருத்துவரான சிவபிரசாத் நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் மற்றும் மேடை கலைஞராக நடித்து வந்தார். சிரஞ்சீவி போன்ற சிறந்த நட்சத்திரங்களுடன் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த வில்லனாக ஆந்திர அரசிடமிருந்து நந்தி விருதையும் பெற்று உள்ளார்.

சிவபிரசாத் மரணம் குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பிற தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சிவபிரசாத் மரணம் குறித்து தெலுங்கு தேச கட்சி தலைவர்  சந்திரபாபு நாயுடு வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் “நான் எனது நெருங்கிய நண்பரை இழந்து விடேன்.  சிவபிரசாத் ஆந்திராவின் உரிமைகளுக்காக இடைவிடாமல் போராடினார். அவரது மரணம் சித்தூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல, முழு மாநிலத்திற்கும் இழப்பு .ஒ ரு வாரத்திற்குள்தெலுங்கு தேசம் கட்சி இரண்டு மூத்த தலைவர்களை இழந்தது வருத்தமளிக்கிறது என்று  கூறினார், 



சமீபத்தில் தான் தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவப்பிரசாத ராவ் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story