காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் டிசம்பரில் திறக்க வாய்ப்பு


காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் டிசம்பரில் திறக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 21 Sep 2019 1:04 PM GMT (Updated: 21 Sep 2019 1:04 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் டிசம்பரில் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியின் மையப்பகுதியான அக்பர் ரோட்டில் 1978ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.  காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமையகம் கட்ட ரவுஸ் அவின்யூ பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கியது.  புதுக்கட்டிடம் கட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அடிக்கல்லும் நாட்டினார். ஆனாலும் தலைமையகம் தொடர்ந்து அக்பர் ரோட்டிலே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்த ஆண்டு டிசம்பரில் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.  இந்த கட்சியின் புதிய தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாக அவரது பெயரில் "இந்திரா காந்தி பவன்" என பெயரிடப்படும் என்றும்,  இந்த  புதிய தலைமையக கட்டிடத்தின் துவக்க விழாவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி திறந்து வைப்பார் என்றும் காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story