அக்டோபர் 21-ந்தேதி குஜராத்தில் மேலும் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்


அக்டோபர் 21-ந்தேதி குஜராத்தில் மேலும் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
x
தினத்தந்தி 23 Sept 2019 3:30 AM IST (Updated: 23 Sept 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

அக்டோபர் 21-ந்தேதி குஜராத்தில் மேலும் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

மராட்டியம், அரியானா மாநில சட்டசபைகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதனுடன் சேர்த்து குஜராத் மாநிலத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதி உள்பட 18 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ரத்தன்பூர் மற்றும் பயாத் ஆகிய மேலும் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

மேற்கண்ட 2 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததை கண்டித்த காங்கிரஸ் ‘தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறது’ என குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story