தேர்தல் ஆணையாளர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்
தேர்தல் ஆணையாளர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 23ந்தேதி அசோக் லவாசாவை தேர்தல் ஆணையராக நியமனம் செய்தது. அதற்கு முந்தைய வருடத்தில் அவர் மத்திய நிதி செயலாளராக பதவி வகித்து ஓய்வு பெற்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல்களில் தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையாளர் சுசில் சந்திரா ஆகிய இருவரும் தேர்தல் நன்னடத்தை விதிகள் பற்றி கூறியதில் இருந்து லவாசா வேறுபட்டார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையாளர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதற்கட்ட விசாரணைக்கு பின் அவரது தனிப்பட்ட நிதிகள் பற்றி கூடுதலாக ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி வருமான வரி துறை கேட்டு கொண்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், லவாசாவோ அல்லது அவரது மனைவியோ இதுபற்றி எதுவும் கூறவில்லை.
Related Tags :
Next Story