கேரள சட்டமன்ற இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு


கேரள சட்டமன்ற இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 Sept 2019 1:30 AM IST (Updated: 24 Sept 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

கேரள சட்டமன்ற இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

பெரும்பாவூர்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.எம்.மாணி. இவர் கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவராகவும், கடந்த 50 ஆண்டுகளாக பாலா தொகுதியில் தொடர்ச்சியாக உறுப்பினராகவும் இருந்து வந்தார். அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜ.க வேட்பாளர்கள் உள்பட 13 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றதால் அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு இரவு 8 மணி வரைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Next Story