2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.சைனி ஓய்வு பெற்றார்


2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.சைனி ஓய்வு பெற்றார்
x
தினத்தந்தி 1 Oct 2019 12:15 AM IST (Updated: 30 Sept 2019 11:54 PM IST)
t-max-icont-min-icon

2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.சைனி நேற்று ஓய்வு பெற்றார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் ஓ.பி.சைனி. 1991-ம் ஆண்டு நீதிபதியாக பொறுப்பேற்ற இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். நாட்டையே உலுக்கிய 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து கடந்த 2017–ம் ஆண்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

இவர், ஏர்செல்–மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story