தரை இலக்குகளை தாக்கவல்ல பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி


தரை இலக்குகளை தாக்கவல்ல பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
x
தினத்தந்தி 1 Oct 2019 2:00 AM IST (Updated: 1 Oct 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

தரை இலக்குகளை தாக்கவல்ல பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

பாலாசோர்,

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), ர‌ஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் தரை இலக்கை தாக்கவல்ல பிரமோஸ் ஏவுகணை ஒன்று நேற்று ஒடிசாவின் பாலாசோரில் சோதித்து பார்க்கப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர். தரையில் இருந்து 290 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணைகளை கடலில் இருந்தும் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story