“சத்திய சோதனை” புத்தகம் மலையாள மொழியில் அதிகம் விற்பனை


“சத்திய சோதனை” புத்தகம் மலையாள மொழியில் அதிகம் விற்பனை
x
தினத்தந்தி 1 Oct 2019 3:21 AM IST (Updated: 1 Oct 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

சத்திய சோதனை புத்தகம் மலையாள மொழியில் அதிகம் விற்பனை ஆகி உள்ளது.

ஆமதாபாத்,

மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகமான ‘சத்திய சோதனை’ பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் ஆங்கில மொழிக்கு அடுத்தபடியாக மலையாள மொழியில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது. அதாவது, மொத்தம் 8 லட்சத்து 24 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. மகாத்மா காந்தியின் தாய்மொழியான குஜராத்தி மொழியில் 6 லட்சத்து 71 ஆயிரம் பிரதிகள்தான் விற்பனையாகி இருக்கிறது.

இந்த புத்தகம் குஜராத்தி மொழியில் 1927-ம் ஆண்டே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மலையாள மொழியில் 1997-ம் ஆண்டில் தான் புத்தகம் வெளியாகி இருந்தபோதும், குறுகிய காலத்திலேயே அதிக பிரதிகள் விற்பனையாகி உள்ளன. கேரள மாநிலத்தில் மக்களிடையே கல்வியறிவு மற்றும் வாசிப்பு கலாசாரம் அதிகம் இருப்பதே அதிக விற்பனைக்கு காரணம். குறிப்பாக இந்த புத்தகத்தை கேரளா பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வாங்கி உள்ளனர். மலையாள மொழிக்கு அடுத்தபடியாக தமிழில் 7 லட்சத்து 35 ஆயிரம் பிரதிகளும், இந்தி மொழியில் 6 லட்சத்து 63 ஆயிரம் பிரதிகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

மேற்கண்ட தகவலை மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட, ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட ‘நவஜீவன் அறக்கட்டளை’யின் நிர்வாக இயக்குனர் விவேக் தேசாய் தெரிவித்துள்ளார்.

Next Story