இட்லி உண்ணும் போட்டி: இளையவர்களை பின்னுக்கு தள்ளி முதல் பரிசை தட்டிச்சென்ற மூதாட்டி


இட்லி உண்ணும் போட்டி: இளையவர்களை பின்னுக்கு தள்ளி முதல் பரிசை தட்டிச்சென்ற மூதாட்டி
x
தினத்தந்தி 1 Oct 2019 4:45 PM IST (Updated: 1 Oct 2019 4:45 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டியில் 60 வயது மூதாட்டி ஒருவர் ஒரு நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு முதல் பரிசை தட்டிச்சென்றார்.

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரில் தசராவை முன்னிட்டு  பெண்களுக்கான இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது.  பந்தல் அமைக்கப்பட்டு, நீண்ட டேபிள் போடப்பட்டு, நடைபெற்ற இந்த போட்டியில்  வயது வித்தியாசமின்றி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இட்லிக்கு சாம்பார் பரிமாறப்பட்டது.  போட்டிக்கான கால அளவாக ஒரு நிமிடம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டிக்கொண்டு பலரும் வேகவேகமாக இட்லிகளை உள்ளே தள்ளினர். அந்த வகையில் 60 வயதான சரோஜம்மா என்ற மூதாட்டி ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு அனைவரையும் பூரிப்படைய வைத்துள்ளார்.
 
இட்லி உண்ண இளையவர்களே திக்குமுக்காடிய நிலையில் ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு அசத்திய சரோஜம்மா முதல் பரிசை தட்டிச்சென்றார். அவருக்கு அனைவரும் பாராட்டை தெரிவித்தனர்.

Next Story