ஆந்திராவில் 3,500 அரசு மதுக்கடைகள் திறப்பு
ஆந்திராவில் மாநிலம் முழுவதும் 3,500 மதுக்கடைகளை அரசு திறந்து உள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் சில்லறை மது விற்பனையை கையகப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 500 மதுக்கடைகளை அரசு திறந்துள்ளது. மேலும் 2019-20 ஆம் ஆண்டின் புதிய கலால் கொள்கையின்படி மதுக்கடைகள் நடத்துவதற்கு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன்படி மதுக்கடை செயல்படும் நேரம் 11 மணியில் இருந்து 9 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 11 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகள் இரவு 8 மணிக்குள் மூடப்படவேண்டும்.
பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் 100 மீட்டருக்குள் மதுக்கடை செயல்படக்கூடாது, மதுபாட்டிலில் குறிப்பிட்டுள்ள எம்ஆர்பி விலையில்தான் மதுவை விற்பனை செய்ய வேண்டும், மதுக்கடையில் மது அருந்தக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கெடுபிடிகளால் பல தனியார் மதுக்கடைகள் உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்றும் மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது என்றும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில் மதுவிற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story