150-வது பிறந்தநாள்: ஒடிசாவின் பத்ராவில் உள்ள மகாத்மா காந்தி கோவிலில் சிறப்பு பூஜைகள்
150-வது பிறந்தநாளையொட்டி ஒடிசாவின் பத்ராவில் உள்ள மகாத்மா காந்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்.
புவனேஸ்வர்,
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுடெல்லியின் ராஜ்காட்டில் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலரஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள பத்ராவில் உள்ள காந்தி கோவிலுக்கு இன்று அதிகமான மக்கள் வந்து குவிந்து உள்ளனர்.
கோவிலில் உள்ள தேசப்பிதாவின் வெண்கல சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து வணங்கினர். சிலைக்கு முன் பக்தி பாடல்களைப் பாடினர். பல சமூக அமைப்புகள் சார்பாகவும் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
1974 ஆம் ஆண்டில் முன்னாள் எம்.எல்.ஏ. அபிமன்யும் குமார் என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது. சம்பல்பூருக்கு அருகில் அமைந்துள்ள பத்ராவில் வசிப்பவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் அங்கு வந்து பூஜை நடத்துகின்றனர். வளாகத்தில் கீதை மற்றும் ‘ராம் துன்’ படிக்கிறார்கள்.
1932ல் சம்பல்பூரில் மகாத்மா காந்தியின் உரையால் தான் ஈர்க்கப்பட்டதாக அபிமன்யும் குமார் கூறி உள்ளார். “அவர் ஒரு மகாபுருசர். கோவில் கட்ட அவரது பேச்சு எனக்கு ஊக்கமளித்தது ”என கூறினார்.
Related Tags :
Next Story