அடக்குமுறை, மதவெறி, வெறுப்பு போன்றவைகளை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி - ராகுல் காந்தி புகழாரம்
அடக்குமுறை, மதவெறி, வெறுப்பு போன்றவைகளை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி என ராகுல் காந்தி புகழாரம் சூட்டி உள்ளார்.
புதுடெல்லி,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பாதயாத்திரை நடத்தப்படுகிறது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில்,
"மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் மகாத்மா காந்திஜிக்கு எனது அஞ்சலி. “தேசத்தின் தந்தை”யான அவரது வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் வன்முறை, மதவெறி மற்றும் வெறுப்பைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழி "அன்பு" என்பதை நமக்குக் காட்டினார் எனத் தெரிவித்துள்ளார்.
On his 150th Jayanti, my tributes to Mahatma Gandhi Ji, the “Father of the Nation”, who through his words & deeds, showed us that love for all living beings & non violence is the only way to defeat oppression, bigotry & hatred.
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2019
#Gandhi150pic.twitter.com/ODRLL7o1os
காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ட்விட்டரில் கூறுகையில், " மகாத்மா காந்தியின் இந்தியாவில் 4 முக்கியத் தூண்கள் இருக்கின்றன. உண்மை, பொறுமை, அகிம்சை, பன்முகத்தன்மை கொண்டாட்டம் ஆகியவைதான். ஆனால் இப்போது, பொய் செய்தி, பொய் விவரம், பொய் குற்றச்சாட்டு, வார்த்தைகளைக் கூட தாங்க முடியாத சகிப்பின்மை, வன்முறை, பன்முகத் தன்மையை இலக்காக்குதல் போன்றவை இருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story