கடந்த 19 மாதங்களில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் மிகக் குறைவு


கடந்த 19 மாதங்களில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் மிகக் குறைவு
x
தினத்தந்தி 2 Oct 2019 5:51 PM IST (Updated: 3 Oct 2019 10:34 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 19 மாதங்களில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் மிகவும் குறைந்து உள்ளது.

புதுடில்லி,

பொருளாதார  மந்தநிலையை பிரதிபலிக்கும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல்  கடந்த செப்டமபர் மாதம் 2.67 சதவீதம் குறைந்து ரூ. 91,916 கோடி இருந்தது.

"2019 செப்டம்பர் மாதத்தில் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய், ரூ. 91,916 கோடியாக இருந்தது. இதில் மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), ரூ.16,630 கோடி, மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி), ரூ. 22,598 கோடி ஆகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி), ரூ. 45,069 கோடி ( இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ.22,097 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ. 7,620 கோடி (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ. 728 கோடி உட்பட)” என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வரியின் வருவாய் தொகை 98,202 கோடி ரூபாயாக இருந்தது. அப்போது இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக பதிவாகியது. அதற்கு முன்பு ஜூன் மாதமும் ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக வசூலாகி இருந்தது. இந்தச் சூழலில் தற்போது ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக ஜிஎஸ்டி வரி வருவாய் செப்டம்பர் மாதமும் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story