காந்தியின் நினைவாக ரூ.150 மதிப்பிலான நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி
மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை குஜராத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
அகமதாபாத்,
சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற மோடி, அங்கு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மோடி, தூய்மை இந்தியா தொடர்பான விழாவில் பங்கேற்றார். குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ருபானியும் பங்கேற்ற இவ்விழாவில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
Related Tags :
Next Story