பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியை புறக்கணித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.


பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியை புறக்கணித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 3 Oct 2019 4:18 PM IST (Updated: 3 Oct 2019 4:18 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தலைமையிலான பேரணியை புறக்கணித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வால் அம்மாநில அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் பேரணி  நடைபெற்றது. 

அதே சமயம் 36 மணி நேர சிறப்பு சட்டமன்றக்கூட்டத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்  அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.  இதனை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியாகாந்தி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட ரேபரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங் பங்கேற்றார்.  

காங்கிரஸ் நடத்திய பேரணியில் பங்கேற்காமல்  சட்டமன்றக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. அதிதி சிங் கலந்து கொண்டது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த  எம்.எல்.ஏ. அதிதி சிங் கூறுகையில், தொகுதி வளர்ச்சியை கருத்தில் கொண்டே முதல்-மந்திரி நடத்திய சிறப்பு சட்டமன்றக்கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

Next Story