மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.441 கோடி
மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் மலபார்ஹில் தொகுதியில் மங்கள் பிரபாத் லோதா எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார்.
மும்பை,
மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் மலபார்ஹில் தொகுதியில் மங்கள் பிரபாத் லோதா எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். 63 வயதான இவர், ஏற்கனவே தொடர்ந்து 6 முறை மலபார்ஹில் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அதுமட்டுமின்றி மிகப்பெரிய செல்வந்தரான இவர், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த மங்கள் பிரதாப் லோதா, அதனுடன் தனது சொத்து மதிப்பு அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
இதன்படி அவருக்கும், அவரது மனைவிக்கும் ரூ.252 கோடிக்கு அசையும் சொத்துகளும், ரூ.182 கோடிக்கு அசையா சொத்துகளும் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அவரது சொத்து மதிப்பு ரூ.441 கோடி என்பது தெரியவந்துள்ளது. இதில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், முதலீட்டு பத்திரங்கள், பங்குகள் அடங்கும். மங்கள் பிரதாப் லோதா எம்.எல்.ஏ. மற்றும் மனைவிக்கு சொந்தமாக மலபார்ஹில் பகுதியில் வீடுகள் உள்ளன.
மேலும் அவர் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் மங்கள் பிரதாப் லோதா மீது 5 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story