சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்து 4 இந்தியர்களை ஈரான் விடுதலை செய்தது கேரளாவை சேர்ந்தவர்கள்
இங்கிலாந்து கப்பலான ஸ்டினோ இம்பெரோ கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி ஈரான் கடல் பகுதியில் சென்றபோது, அந்த கப்பலை ஈரான் சிறை பிடித்தது.
கொச்சி,
இங்கிலாந்து கப்பலான ஸ்டினோ இம்பெரோ கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி ஈரான் கடல் பகுதியில் சென்றபோது, அந்த கப்பலை ஈரான் சிறை பிடித்தது. இந்த கப்பலில் மொத்தம் 23 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 18 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.
அந்த கப்பலில் இருந்த 4 இந்தியர்களை ஈரான் விடுவித்தது. அவர்கள் ஈரான் துறைமுகம் வழியாக துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்கள் துபாயில் இருந்து கேரளாவுக்கு திரும்பினர். இதில் ஓட்டல் மேலாண்மை படித்த டி.ஜோ பாப்பச்சன்(வயது26) என்பவரும் ஒருவர் ஆவார். அவர் எர்ணாகுளம் மாவட்டம் காலமாச்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
விடுதலை செய்யப்பட்ட டி.ஜோ பாப்பச்சன் கூறுகையில் ‘தன்னுடன் கேரளாவை சேர்ந்த கண்ணணூர், கொச்சி துறைமுகம் மற்றும் திரிபுனித்துரா ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேரும் விடுவிக்கப்பட்டதாக’ தெரிவித்தார்.
Related Tags :
Next Story