பீகாரில் வெள்ளசேத பகுதியை பார்வையிட சென்ற பா.ஜ.க. எம்.பி. படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கினார்


பீகாரில் வெள்ளசேத பகுதியை பார்வையிட சென்ற பா.ஜ.க. எம்.பி. படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கினார்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:00 AM IST (Updated: 4 Oct 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழையால் பீகாரில் சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தலைநகர் பாட்னா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

பாட்னா, 

தென்மேற்கு பருவமழையால் பீகாரில் சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தலைநகர் பாட்னா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி பீகாரில் மட்டும் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இந்நிலையில் பாட்னா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பா.ஜ.க. எம்.பி. ராம்கிர்பால் யாதவ், படகில் சென்று பார்வையிட்டார். அவருடன் அதிகாரிகளும் சென்றனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்தது.

இதனால் அதில் இருந்த ராம் கிர்பால் யாதவ் உள்ளிட்ட அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அடுத்தடுத்த படகுகளில் வந்த பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக அனைவரையும் மீட்டனர்.

Next Story