சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எங்கே இருக்கிறது? ப.சிதம்பரம் கேட்கிறார்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது குடும்பத்தினர் மூலம் டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “சகோதரத்துவம் செத்து விட்டது. சாதி வெறியும், மத வெறியும் முன்னுக்கு வந்து விட்டன. சமத்துவம் என்பது தொலைதூர கனவாக இருக்கிறது. எல்லா ஆதாரங்களும் இந்தியர்களிடையே சமத்துவமின்மை வளர்ந்து வருவதை காட்டுகின்றன. பலவீனமாக ஒளிரும் ஒரே சுடர் சுதந்திரம் மட்டும்தான். அது பிரகாசமாக எரியுமா அல்லது செத்துப்போகுமா? காலம்தான் சொல்ல முடியும்” என கூறி உள்ளார்.
மேலும், “மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி ஓராண்டு கால கொண்டாட்டம் தொடங்கியுள்ள தருணத்தில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எங்கே என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்” என்றும் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story