ஜம்மு காஷ்மீர்,டெல்லியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டம்


ஜம்மு காஷ்மீர்,டெல்லியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2019 12:10 PM IST (Updated: 4 Oct 2019 12:10 PM IST)
t-max-icont-min-icon

ஜெய்ஷ்-இ-முகமது ஜம்மு காஷ்மீர்,டெல்லியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களைத் நடத்த திட்டமிட்டு உள்ளது இதற்கான சதி திட்டம் பண்டிபூர் ஆப்பிள் பழத்தோட்டத்தில் நடைபெற்றது.

புதுடெல்லி: 

பாகிஸ்தானை மையமாக  கொண்ட பயங்கரவாதக் குழு ஜெய்ஷ்-இ-முகமது தளபதி அபு உஸ்மான் சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பண்டிபூரில் உள்ள ஒரு ஆப்பிள் பழத்தோட்டத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில் தனது ஆதரவாளர்களிடம், காஷ்மீர் மக்கள் விரைவில் ஜம்முவில் பெரிய தாக்குதல்கள் குறித்து  நல்ல செய்தியைக் கேட்பார்கள் என்று கூறினார். எங்கள் சகோதரர்கள்  ஏற்கனவே டெல்லியை அடைந்து விட்டார்கள் என கூறி உள்ளார்.

இந்த சந்திப்பு சுமார் 5-6 நாட்களுக்கு முன்பு பழத்தோட்டத்தில் நடந்தது. இந்த தகவலை புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளதாக  டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

ஒரு பாகிஸ்தானிய பயங்கரவாதியும், இரண்டு காஷ்மீர்  பயங்கரவாதிகளும் ஒரு ஏ.கே .47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் நுழைந்து உள்ளனர்.

ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஆகியவை எதிர் வரும் பண்டிகை நாட்களின் போது டெல்லியில்  பயங்கரவாத தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று புலனாய்வுப் அமைப்பின்  எச்சரிக்கையை தொடர்ந்து  டெல்லியில் பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பண்டிகை காலங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த சிலர் டெல்லிக்குள் நுழைந்து உள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் டெல்லி போலீசாருக்கு நம்பகமான தகவல்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் நேற்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.  தொடர்ந்து சோதனைகளும்  நடைபெற்று வருகிறது. இருப்பினும்,  இதுவரை யாரும் பிடிபடவில்லை மற்றும் எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

உளவுத்துறையின் தகவல்கள் மிகவும் நம்பகமானதாக கருதப்படுவதால் சோதனைகள்  மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story