ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது இந்திய ரிசர்வ் வங்கி
ரெப்போ கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் வட்டி குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
வங்கிகளுக்கான குறைந்தபட்ச வட்டி (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. ரெப்போ வட்டி, 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 5-வது முறை ஆகும். 5 முறையும் சேர்த்து ரெப்போ வட்டி மொத்தமாக 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகித எதிர்பார்ப்பு 6.9%ல் இருந்து 6.1% ஆக குறைத்தது. இதனையடுத்து 2020 - 21ம் ஆண்டிற்கான ஜிடிபி 7.2 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story