அரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் கட்சியில் இருந்து விலகல்


அரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் கட்சியில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 6 Oct 2019 2:00 AM IST (Updated: 6 Oct 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

அரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் கட்சியில் இருந்து விலகினார்.

புதுடெல்லி,

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக இருந்தவர் அசோக் தன்வார். கட்சியின் மாநில தலைவராகவும் பதவி வகித்திருக்கும் இவர் நேற்று கட்சியில் இருந்து விலகினார். இது தொடர்பாக கட்சி தலைவர் சோனியாவுக்கு எழுதி இருந்த 4 பக்க ராஜினாமா கடிதத்தை தனது டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கட்சி தலைமையை கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார். அரசியல் எதிரிகளால் இல்லாமல், உட்கட்சியினரால்தான் காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் நலனை பாதிக்கும் அமைப்பு ரீதியான நடைமுறையை எதிர்த்தே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

அரியானா சட்டசபை தேர்தல் 21-ந் தேதி நடைபெறும் நிலையில், இதற்கு வேட்பாளர்களை தேர்வு செய்ததில் அசோக் தன்வாருக்கு அதிருப்தி இருந்தது. இது தொடர்பாக டெல்லியில் சோனியாவின் வீட்டுமுன் அவர் போராட்டமும் நடத்தினார். அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.

மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், முன்னணி தலைவர் ஒருவர் விலகியிருக்கும் சம்பவம் அரியானா காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Next Story