இந்தியரை மணம் முடித்த பாகிஸ்தானிய பெண்; 34 வருட போராட்டத்திற்கு பின் கிடைத்த இந்திய குடியுரிமை
இந்தியரை மணம் முடித்த பாகிஸ்தானிய பெண்ணுக்கு 34 வருட போராட்டத்திற்கு பின் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது.
முசாபர்நகர்,
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ஜுபைதா பேகம். இவர் இந்தியர் ஒருவரை கடந்த 34 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இதன்பின் அவர் கணவருடன் இந்தியாவில் வசித்து வந்துள்ளார். எனினும் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சென்று குடியுரிமை பெற முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவை பலனளிக்கவில்லை.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, இந்திய குடியுரிமை பெறுவதற்காக நாங்கள் டெல்லி மற்றும் லக்னோ நகரில் பல முயற்சிகளை மேற்கொண்டோம். கடந்த வாரம் எனக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இதனை மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதனை எனக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story