அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டு சான்று - விமானப்படை தளபதி பதாரியா வழங்குகிறார்


அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டு சான்று - விமானப்படை தளபதி பதாரியா வழங்குகிறார்
x
தினத்தந்தி 7 Oct 2019 2:30 AM IST (Updated: 7 Oct 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டு சான்றினை விமானப்படை தளபதி பதாரியா வழங்க உள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சென்று, அங்குள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு போட்டு அழித்தன.

27-ந் தேதி, பாகிஸ்தான், தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. அந்த விமானங் களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.

இந்த வீர தீரச்செயல்களுக் காக அபிநந்தனின் படைப் பிரிவுக்கு (51-வது படைப் பிரிவு) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

நாளை (8-ந் தேதி) நடக்கிற விழாவின்போது இந்த பாராட்டு சான்றிதழை அபிநந்தன் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் சதிஷ் பவாரிடம் விமானப்படை தளபதி பதாரியா வழங்குகிறார்.

Next Story