ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய விஜயதசமி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரிகள்


ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய விஜயதசமி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரிகள்
x
தினத்தந்தி 8 Oct 2019 9:21 AM IST (Updated: 8 Oct 2019 9:21 AM IST)
t-max-icont-min-icon

மகாராஷ்டிராவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய விஜயதசமி கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.

நாக்பூர்,

மகாராஷ்டிராவின் நாக்பூரில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தியது.  இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரிகளான நிதின் கட்காரி மற்றும் வி.கே. சிங் (ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை சேர்ந்த தொண்டர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  அவர்கள் தலைவர்கள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

Next Story