இந்திய விமானப்படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து


இந்திய விமானப்படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 8 Oct 2019 9:33 AM IST (Updated: 8 Oct 2019 9:33 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனை அடுத்து புதுடெல்லியில் உள்ள காஜியாபாத் அருகே ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை  தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 87-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே. சிங் பதவுரியா மற்றும் இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் ஆகிய முப்படைகளின் தளபதிகள் இன்று மலர்வளையம் வைத்து வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில்,  இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நமது பெருமைமிகு தேசம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இந்திய விமானப்படை மிகுந்த அர்ப்பணிப்புடனும், சிறப்புடனும் இந்தியாவுக்கு தொடர்ந்து சேவை ஆற்றும் என பதிவிட்டுள்ளார்.



Next Story