நவராத்திரி விழா; காஷ்மீரின் வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை


நவராத்திரி விழா; காஷ்மீரின் வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை
x
தினத்தந்தி 8 Oct 2019 10:31 AM IST (Updated: 8 Oct 2019 10:31 AM IST)
t-max-icont-min-icon

நவராத்திரி விழாவை முன்னிட்டு காஷ்மீரின் வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

ஜம்மு,

நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான நவராத்திரி திருவிழா பக்தர்களால் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.  நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.

இதனிடையே, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் அதிக அளவில் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது.  இதுபற்றி ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சிம்ரன்தீப் சிங் கூறும்பொழுது, இந்த வருட நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு கடந்த செப்டம்பர் 29ந்தேதியில் இருந்து அக்டோபர் 7ந்தேதி வரை 3 லட்சத்து 64 ஆயிரத்து 643 பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு உள்ளனர்.  இது மற்ற ஆலயங்களை விட இந்த வருடத்தில் மிக அதிக எண்ணிக்கை ஆகும் என கூறினார்.

Next Story