ராஜஸ்தானில் நவராத்திரி விழாவில் சோகம்; துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலி
ராஜஸ்தானில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
தோல்பூர்,
ராஜஸ்தானில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. இதற்காக திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதன்பின் ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் தோல்பூர் நகரில் உள்ள பார்வதி ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story