போலீஸ் அதிகாரியின் தலைமுடியை சுத்தம் செய்யும் குரங்கு காவலரின் வைரல் வீடியோ காட்டுகிறது


போலீஸ் அதிகாரியின் தலைமுடியை சுத்தம் செய்யும் குரங்கு காவலரின் வைரல் வீடியோ காட்டுகிறது
x
தினத்தந்தி 9 Oct 2019 12:29 PM IST (Updated: 9 Oct 2019 12:29 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரின் தலைமுடியை சுத்தம் செய்யும் குரங்கு வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லக்னோ

உத்தரபிரதேசம்  பிலிபிட் நகரில் உள்ள  போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் திவேதி என்பவர்,  குரங்கு ஒன்றை தன்னுடன் வைத்து அவ்வப்போது தலைமுடியை சுத்தம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.

அண்மையில் அவர் அலுவலகத்தில் வழக்கு ஒன்றின் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது தோள்பட்டையில் அமர்ந்தபடி குரங்கு ஒன்று அவருக்கு தலைமுடியை சுத்தம் செய்து கொண்டிருந்தது.

தலையில் பேன் பார்ப்பது போல் இருந்த இந்த காட்சி, தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குரங்கு தன் மீது அமர்ந்திருந்தும், அதனை பொருட்படுத்தாது காவலர் இயல்பாக தனது பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.


Next Story