சமூகவலைத்தளங்களில் வதந்தி: ‘பாலிசிதாரர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது’ - எல்.ஐ.சி. விளக்கம்
பாலிசிதாரர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என சமூகவலைத்தளங்களில் பரவிய வதந்திக்கு எல்.ஐ.சி. விளக்கம் அளித்துள்ளது.
மும்பை,
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. கடும்நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான பாலிசிதாரர்களின் பணம் பாதுகாப்பாக இல்லை என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு எல்.ஐ.சி. நிறுவனம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘எல்.ஐ.சி. தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளியான தகவல்கள் பொய்யானவை. அடிப்படை ஆதாரம் இல்லாதவை. எல்.ஐ.சி.யின் நிதி ஆதாரம் நன்றாக உள்ளது. நிதி நெருக்கடி எதுவும் இல்லை. லட்சக்கணக்கான பாலிசிதாரர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. சமூகவலைத்தளங்களில் வெளியான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story