தேசிய செய்திகள்

வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் நாட்டிலேயே முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம் + "||" + First time in our country; Private plane seized

வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் நாட்டிலேயே முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம்

வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் நாட்டிலேயே முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம்
கேரளாவில் வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் நம் நாட்டில் முதன் முறையாக தனியார் விமானம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
கொச்சி,

விமான பைலட்டுகளான சூரஜ் ஜோஸ் மற்றும் சுதீஷ் ஜார்ஜ் கொச்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு தனியார் வங்கியிடமிருந்து விமானம் வாங்குவதற்காக ரூ. 4 கோடி கடன் பெற்று ஒரு தனியார் விமானத்தை வாங்கியுள்ளனர். இவர்கள் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் முழுமையாக ரூ. 6 கோடி அதிகரித்துள்ளது.


வாங்கிய கடன் தொகையை சரிவர செலுத்தாததால் இவர்கள் வாங்கிய விமானத்தை தற்போது தனியார் வங்கி ஜப்தி செய்துள்ளது. வங்கிக் கடனை திரும்ப செலுத்தாமல் ஒரு தனியார் விமானம் ஜப்தி செய்யப்படுவது நமது நாட்டில் இதுவே முதன் முறையாகும்.