பிரபல இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்


பிரபல இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்
x
தினத்தந்தி 11 Oct 2019 9:08 AM IST (Updated: 11 Oct 2019 9:08 AM IST)
t-max-icont-min-icon

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (வயது 69) உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் காலமானார்.

மங்களூரு,

கர்நாடகா மாநிலம் பந்த்வால் அருகே உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத் தொட்டவர் கத்ரி கோபால்நாத்.

தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களாக கத்ரி கோபால்நாத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.

கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகந்த் கத்ரி, இசை அமைப்பாளராக உள்ளார். மற்றொரு மகன் குவைத்தில் இருக்கிறார். கர்நாடகாவின் பாதவிங்கடி என்ற இடத்தில் கத்ரி கோபால்நாத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு திரைபிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Next Story